இத்தாலி நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு.

இத்தாலி நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு.

இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் வந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்த இரண்டு மீனவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட 9 மீனவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் தலைவர் அருட்தந்தை சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அருட்தந்தை சர்ச்சில் கூறியதாவது:

கடந்த 2012 ஆம் ஆண்டு கேரளா கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த குமரி மீனவர் ஆஜீஸ் பிங்க் மற்றும் கேரளாவை சேர்ந்த ஜலாஸ்டின் ஆகிய 2 மீனவர்களை இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இந்த வழக்கில் மனதளவிலும், உடல் அளவிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் தகுந்த நஷ்ட ஈடை இத்தாலி அரசு வழங்க வேண்டும் என சர்வதேச தீர்ப்பாயம் 21-05-2020 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் சுட்டு கொல்லப்பட்ட 2 மீனவர்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும். மேலும் அதே படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 9 மீனவர்கள் இந்த சம்பவதை நேரில் பார்த்து அதனால் மனதளவிலும், உடல் அளவிலும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்துள்ளனர்.

எனவே குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 9 மீனவர்களுக்கும் இத்தாலி அரசிடம் இருந்து இந்திய அரசு நிவாரணம் பெற்று தர வேண்டும் என அவர் கூறினார்.

Leave a Reply

error: Content is protected !!