

Advertising
ரஜினி, கமலை அடிக்கிற அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது என சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே நடைபெற்ற போராட்டத்தில் “தமிழ் மீனவர்களை அடித்தால்…சிங்கள மாணவனை அடிப்பேன்..” என பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர் நின்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது. ரஜினியும் கமலும்

எம்.ஜி.ஆர்-யை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவிற்குத்தான் போய் சேரும். எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் நாங்கள் அவரை மதிக்கிறோம் மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்.ஜி.ஆர்” என்று கூறினார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் சீமான், அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராட வேண்டுமே தவிர திரைத்துறையில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் செல்வாக்கை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி வருகிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணுவிற்கு இல்லாத தகுதி, நடிகர்களுக்கு உண்டா..?
என ஆவேசமாக கூறினார்..
