மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை: அதிரடி காட்டிய நாம் தமிழர் கட்சியினர்… CCTV காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்!

நேற்று அரசு பேருந்தில் பயணிகள் போல் வந்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்யும் சிசிடிவி காட்சிகள்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தையொட்டி அமைச்சர் மூர்த்தி தலைமையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றதில் சமரசம் எட்டப்படாததால், திருமங்கலம் பகுதியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுங்கச்சாவடியை முற்றையிட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவரது ஆதரவாளர்களுடன் வந்து முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி வழியாக சென்ற அரசு பேருந்தில் பயணிகள் போல் வந்து பேருந்து சுங்கச்சாவடியை கடக்கும் போது பேருந்தில் இருந்து இறங்கி சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனர் அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!