ஐகோர்ட் அதிரடி உத்தரவு: இந்திய குடிமகன் இல்லாதவருக்கும் வழங்க வேண்டும்… இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சி

கடலில் பேனா சிலை மக்கள் வரிப்பணத்தில் தேவையா? என்று இணையதளத்தில் மாபெரும் கருத்து கணிப்பு – லிங்கை தொட்டு வாக்களிக்கவும்…


கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். உள்நாட்டு போர் நடந்த போது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்தேன். கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவுள்ளதால், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தேன். நான் இந்திய குடிமகன் இல்லை எனக் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20ல் இந்திய குடிமகன் அல்லாதோருக்கு பாஸ்பார்ட் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது.

அதில் பொதுநலன் கருதி, அரசு நினைத்தால் இந்திய குடிமகன் அல்லாதோருக்கும் பாஸ்போர்ட் வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் தற்போது இலங்கை குடிமகனும் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்கிறார். எனவே, பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20ன் கீழ் பாஸ்போர்ட் வழங்கலாம். மனுதாரர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதை மத்திய உள்துறை செயலாளர் பரிசீலித்து விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!