தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்மையான மருத்துவமனை என்று மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களால் கூறப்பட்டு வரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கும் வசதிகள் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் வசதிகளுடன் குழந்தைகள் நலன் மற்றும் மகப்பேறுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உள்ளூர்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபடும் கர்ப்பிணி பெண்களில் பெரும்பாலோனோர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறும் நிலை ஏற்படுவதால் பல ஊர்கைளை கடந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்று வருகின்றர்.
இந்நிலையில் அங்கே பணிபுரிந்து வரும் செவிலியர்கள் மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகளை பார்க்க லஞ்சம் கேட்பதாகவும் அதிலும் ஆண் குழந்தை பிறந்தால் 1000 ரூபாய் என்றும் பெண் குழந்தை பிறந்தால் 800 ரூபாய் என்றும் மகப்பேறு பிரிவில் பணியில் உள்ள செவிலியர்கள் தொடர்ச்சியாக பிறந்த குழந்தைகளை பார்ப்பதற்கு பெற்றோர்களிடம் ரூபாய் 1000 வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு குழந்தையை ஒப்படைக்கிறார்கள் எனவும்,இது குறித்து பல முறை மனு அளித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும்,
இது போன்ற செயல் தொடர்ந்து நடைபெற்றால் மருத்துவ நிர்வாகத்தை கண்டித்து பெரும் போரட்டம் நடத்தப்படும் என மருத்துவமனை (டீன்) முதல்வரிடம்
மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஜெகேநேசன் அவர்கள் புகார் மனு கொடுத்துள்ளார்.
![](https://lemooriyanews.com/wp-content/uploads/2020/09/IMG_20200608_193858-819x1024.jpg)