திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருவார்கள். வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து தைப்பூச திருவிழாவை தரிசித்துச் செல்வார்கள் வழக்கம்போல இந்த ஆண்டும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து இருந்தனர்.
அவர்கள் இரவு நேரத்தில் உறங்ககுவதற்காக கோவில் வளாகத்தில் தயாராகினர். அப்போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொரோனா காலம் என்பதால் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி பக்தர்களை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு வசதியாக இந்து சமய அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்தார். பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உறங்கினர். மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கையை கண்டு மகிழ்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொண்டனர்.
மேலும் இது போன்ற செய்திகளைப் பெற வாட்ஸ்அப் குழுவில் இணையவும் https://chat.whatsapp.com/HG6btQp9bheFQOgerJBbgk