மதுரை மாநகரில் 24 மணி நேரமும் ரோந்து பணியை கண்காணிக்க E-BEAT திட்டம் அறிமுகம்

மதுரை மாநகரில் ரோந்து காவலர்கள் பட்டா புத்தகத்தில் கையெழுத்திடும் முறைக்கு பதிலாக புதிய செயலி மூலம் E-BEAT திட்டத்தை மதுரை மாநகர காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ரோந்து செல்லும் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சரியான நேரத்திற்கு செல்கின்றார்களா என்பதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய முடியும். E-BEAT திட்டதில் மதுரை மாநகரில் 200 – க்கும் மேற்பட்ட இடங்களில் QR code ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ரோந்து செல்லும் காவலர்களின் வருகை பதிவு

Advertising

கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பொது மக்களை பாதுகாக்கவும், குற்றவாளிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன் அவற்றை முன் கூட்டியே தடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகரில் வசிப்பவர்கள் வெளியூர்களுக்குச் செல்லும் போது தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லவும். அவ்வாறு நீங்கள் தகவல் தெரிவித்துவிட்டு செல்லும்பொழுது
உங்களது வீட்டில் இந்த QR code உள்ள ஸ்டிக்கர் உங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களிலிருந்து ஒட்டப்பட்டு ரோந்து காவலர்கள் உங்களது வீட்டை நீங்கள் வீட்டிற்கு திரும்பி வரும்வரை பாதுகாப்பாக கண்காணிப்பார்கள் இவ்வாறு நீங்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மதுரை மாநகரில் குற்றச்சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை எளிதாக தடுக்க முடியும்.

Leave a Reply

error: Content is protected !!