திருமங்கலம் டி.குன்னத்துாரில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், அம்மா (ஜெயலலிதா) கோயிலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.
இதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10:00 மணிக்கு வந்த முதல்வர், நேரடியாக டி.குன்னத்துார் சென்றார். அங்கு கோயிலை முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைத்தனர். பின்னர், கோ பூஜையில் பங்கேற்று மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் 120 பசுக்களை தானம் செய்தார். நலிவுற்ற 234 கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கியதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அம்மா கோயில் திறப்பு விழாவையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோங்கள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து அ.தி.மு.க., நிர்வாகிகள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
இதற்கிடையே மதுரை T.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி என்ற இடத்தில் T.குன்னத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்லும் போது மினி ஆட்டோ (குட்டியானை) கவிழ்ந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.