மதுரை: திருப்பரங்குன்றம் அருகே இரயில் மோதி பெண் பலி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ரயிலில் மோதி இறந்த பெண் சடலம் மீட்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் – திருமங்கலம் இடையே கூத்தியார்குண்டு ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் பெண் சடலத்தை மீட்டு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் அடிபட்டு இறந்தவர் கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த வீரலட்சுமி (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அப்பெண்ணின் சடலத்லை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.

Leave a Reply

error: Content is protected !!