மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழ விடுதலை காக தீக்குளித்து இறந்த கு.முத்துகுமாரின் 12ம் ஆண்டு நினைவு தினத்திற்கு தெருமுனைக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு
மதுரை அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜ் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
அதற்கு ஒரிரு நாளில் பதிலளிப்பதாக தெரிவித்த ஆய்வாளர் ஒரு வார காலமாக கட்சி நிர்வாகிகளை அலைக்கழித்ததாகவும் மேலும் முத்துகுமாரை இழிவாக பேசி தமிழ் மொழி, தமிழர்களையும் தரைக்குறைவாக பேசி அனுமதி மறுத்துள்ளார்.
இந்நிலையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் அவர்கள் மற்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறார் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து அனுமதி மறுப்பு கடிதத்தை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அக்கட்சியினரை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜ் கட்சி நிர்வாகிகளை அவதூறாக பேசியதோடு அனுமதி மறுத்தால் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுப்பீர்களா? என மிரட்டு போஸ்டரில் இருந்த தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரனை தரக்குறைவாகப் பேசி போஸ்டர்களை பறித்து சென்றுள்ளார்.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பரங்குன்றப் பகுதியில் அவனியாபுரம் காவல் ஆய்வாளரைக் கண்டித்தும், அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக போஸ்டர் ஓட்டியதால் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.