சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ஜெயபிரதீப் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது “தமிழகத்தில் அம்மாவின் அரசு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும். மன நிம்மதிக்காக தொடர்ந்து ஆன்மீக தளங்களுக்கு சென்று வருகிறேன். மரியாதை நிமித்தமாக சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன் “என்றார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணையவும்.
