மதுரை திருமங்கலத்தில் உள்ள பயணியர் விடுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ் செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
