நண்பரின் நினைவு தினத்தில் மது குடித்துக் கொண்டாடும் இளைஞர்களுக்கு மத்தியில் இரத்தம் கொடுத்து கொண்டாடிய இளைஞர்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜி மற்றும் அவரது நண்பர் விசு இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு இறந்தனர் .விஜி மற்றும் விசு இருவருமே இரத்ததானம் மற்றும் சமூக சேவை செய்து வந்ததால் அவரது நண்பர்கள் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவை போற்றும் விதமாக ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர்.

பொழுதுபோக்கிற்காக மது குடித்துவிட்டு சுற்றி திரியும் இளைஞர்களுக்கு மத்தியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரத்ததானம், மரக்கன்று நடுகல் மற்றும் மருத்துவ முகாம் நடத்திய நண்பர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மருத்துவ முகாம் இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை விஜி-விசு நண்பர்கள் குழு சார்பாக நாகலிங்கம், ஆனந்த், தனசேகரன் ,லெஷ்மணன் , பிரதாப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணையும்…

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


Leave a Reply

error: Content is protected !!