மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிலைமான் பகுதியில் ராஜா என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார்.
இவர் சிவகங்கை மாவட்டம் கீழடி மத்திய பகுதியை சேர்ந்தவர் .நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றவர்
மறுநாள் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 17 செல்போன்கள் திருடபட்டது தெரியவந்தது.
அதன் மதிப்பு ரூபாய் 70 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும் .இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராவில் இருந்ததை தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.