டோல்கேட்டுகளில் யாரெல்லாம் கட்டணம் செலுத்த தேவையில்லை… எப்படி அப்ளை செய்வது..? – முழு விவரம்


இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சராசரியாக 60 கிமீ தொலைவு இடைவெளிகளில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.

டோல்கேட் என்படும் இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம்.

முன்பெல்லாம் சுங்கச் சாவடி கவுண்டர்களில் பணம் கொடுத்து கட்டணம் செலுத்தும் நடைமுறை வழக்கில் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் fastag முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் ஆன்லைன் ரீசார்ஜ் முறையில் தங்கள் சுங்கக் கட்டணங்களை செலுத்திக்கொள்ளலாம்.

பல நடுத்தர மக்களும் சுங்கக் கட்டணம் செலுத்தி பயணிப்பது கடும் நிதிச்சுமையாக உள்ளது என்று கவலையை வெளிப்படுத்தும் நிலையில், சிலருக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு விதி விலக்கு உள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள், 2008ன் விதி 11இன் கீழ், பயனர் கட்டணம் செலுத்துவதில் இருந்து சில வாகனங்களுக்கு விலக்கு தரப்பட்டள்ளது. இவர்கள் பயணிக்கும் வாகனங்களில் ட fastag ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கட்டணம் செலுத்த விதிவிலக்கு:

குடியரசுத் தலைவர்
குடியரசு துணைத் தலைவர்
பிரதமர்
மாநில ஆளுநர்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
மக்களவை சபாநாயகர்
மத்திய அமைச்சர்
மாநில முதலமைச்சர்
உச்ச நீதிமன்ற நீதிபதி
மாநில அமைச்சர்
யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர்
தலைமை அதிகாரிகள்
மாநில சட்ட மேலவை தலைவர்
மாநில சட்ட மேலவை சபாநாயகர்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
உயர் நீதிமன்ற நீதிபதி
நாடாளுமன்ற உறுப்பினர்
இராணுவத் தளபதி, துணைத் தளபதிகள் மற்றும் பிற சேவைகளில் சமமானவர்கள்
மாநில அரசு தலைமை செயலாளர்
இந்திய அரசின் செயலாளர்
மாநில கவுன்சில் செயலாளர்
மக்கள் மன்ற செயலாளர்
அரசுப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரமுகர்
எம்எல்ஏ மற்றும் எம்எல்சி
பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா மற்றும் சௌர்ய சக்ரா விருது பெற்றவர்கள்
இந்திய டோல் (இராணுவம் மற்றும் விமானப்படை) சட்டம், 1901 27 இன் கீழ் தகுதியானவர்கள்
பாதுகாப்பு அமைச்சகம் சீருடையில் மத்திய மற்றும் மாநில ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்
எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் தீயணைப்பு துறை அல்லது அமைப்பு அதிகாரிகள்
NHAI/ தேசிய நெடுஞ்சாலைகளின் ஆய்வு, கட்டுமானம் அல்லது செயல்பாடு அல்லது பராமரிப்பு மற்றும் கணக்கெடுப்பு நோக்கத்திற்காக வாகனங்களைப் பயன்படுத்தும் அரசு நிறுவன வாகனங்கள்
ஆம்புலன்ஸ்
இறுதி ஊர்வலம்
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயந்திர வாகனங்கள்
இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு சுங்கக்கட்டணம் செலுத்த விதிவிலக்கு ஆகும்.

இந்த விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் fastag விண்ணப்பத்தின் போது, விண்ணப்ப படிவத்துடன் வாகனத்தின் ஆர்சி, ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் அட்டை/ வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஒன்று, விலக்கு சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்கும் வழி:

1. முதலில் https://ihmcl.co.in/ இணையதள முகவரிக்கு சென்று https://exemptedfastag.nhai.org/Exemptedfastag/ லிங்கிற்குள் நுழைய வேண்டும்.

2. அதில் யூசர் ஐடி கிரியேட் செய்ய உங்கள் பெயர், இமெயில் ஐடி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்த வேண்டும்.

3. இதை பதிவு செய்ததும் உங்கள் இமெயில் ஐடிக்கு பிரத்தியேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை அனுப்பப்படும்.

4. இந்த ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை கொண்டு IHMCL இணையதளத்தில் லாக் இன் செய்யவேண்டும்.

5. டாஷ்போர்டு பிரிவில் இருந்து வில்க்கு அளிக்கப்பட்ட Fastag படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

6. அப்லோட் பார்ம் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் கேட்கப்படும் தரவுகளை பதிவு செய்து ஆவணகளின் ஸ்கேன் நகல்களை அப்லோடு செய்ய வேண்டும்.

7. இறுதியாக submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டிபிகேஷன் பெற்ற உடன், விலக்கு வழங்கப்பட்ட fastagஐ தேர்வு செய்த NHAI பிராந்திய அலுவலகத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

அரசு அறிவித்துள்ள இந்த விலக்கானது உள்ளூர்வாசிகளுக்கு பொருந்தது. மத்திய அரசு விதியின் படி விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களை தவிர வேறு வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அவசியம். இதை பயனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். Fastag விலக்கானது தனியார் வாகனங்களுக்கு 1 ஆண்டும், அரசு வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் செல்லுபடியாகும். தகுதி, நிபந்தனைகளின் அடிப்படையில் புதுப்பித்தல் அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Similar Posts

Leave a Reply