
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும், நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
வயது மூப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பிரச்சனை இருந்ததன் காரணமாகவும் நோயின் வீரியம் அதிகரித்து நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சுயநினைவு இழந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில்தற்போதுசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
