தூத்துக்குடி தன் பாடு உப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகம் எம்.எல்.ஏ தலைமையில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வடக்கு மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு கழக மகளிர் அணி மற்றும் பொது உறுப்பினர் சேர்க்கை என பல்வேறு பணிகளை மேற்கொண்டு தேர்தல் பணிகளுக்காக ஆலோசனை வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் ஆகிய ஆலோசனை பேரில் இக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்துப் பிரிவினரும் மகளிர் அணியினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொண்டனர்.