“நீங்கள் தெ.ஆப்பிரிக்காவை கிட்டத்தட்ட வீழ்த்திவிட்டீர்கள்” – நேபாளை போற்றிய ஹர்ஷா போக்லே

கிங்ஸ்டவுன்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் – டி’ சுற்று ஆட்டத்தில் நேபாள அணிக்கு எதிராக 1 ரன்னில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. இந்தப் போட்டியில் நேபாளம் தோல்வியை தழுவி இருந்தாலும் தோல்வி பயத்தை தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் மனதில் விதைத்தது.

நேபாள அணியின் செயல்பாட்டை பலரும் பாராட்டி வரும் நிலையில் அதில் இணைந்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே. கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் நேபாளத்தை போற்றி வருகின்றனர்.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதனை நேபாளம் விரட்டியது. கடைசி ஓவரில் நேபாளத்துக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், நேபாளம் 6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

“தலையை உயர்த்தி வையுங்கள். நீங்கள் தென் ஆப்பிரிக்காவை கிட்டத்தட்ட வீழ்த்திவிட்டீர்கள். உங்கள் அணிக்கென அதி தீவிர ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு உங்களது ஆட்டத்தின் மூலம் நம்பிக்கை தருகிறீர்கள். வரும் நாட்கள் உங்களுக்கு முக்கிய நாட்களாக அமையும்” என ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!