நீல நிறத்தில் வாழைப்பழம் சுவையோ ஐஸ்கிரீம் போல இருக்கும்.

ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று வாழைப்பழம். இது உலகளவில் அனைத்து மக்களாலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய வகை வாழைப்பழத்தை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக வாழைப்பழத்தில் கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை என்று பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்று தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும், பச்சை வாழை மற்றும் செவ்வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலை கொண்டிருக்கும் என்பது தெரியும்.

ஆனால், ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சர்யம். தற்போது இந்த பழத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவை வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதானவை. அவை எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை. இந்த வாழைப்பழங்கள் பழுத்தவுடன், அவை பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும். இந்த வகை வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன. அதேபோல அவை ஹவாயிலும் நன்கு வளரக்கூடியவை ஆகும். இந்த பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.

சுவாரஸ்யமாக, இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியை தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 40F ஆகும். சமீபத்தில், ட்விட்டர் யூசர் தாம் கை மெங் என்பவர் தான் இந்த அரியவகை வாழைப்பழம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

வாழைப்பழத்தின் புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் பலர் வியப்பில் ஆழ்ந்தனர். இது எப்படி சாத்தியமானது என்று பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல ஹைபிரிட் செய்யப்பட்டிருந்தாலும் இந்த பழத்தின் சுவையானது ஊட்டச்சத்திலிருந்து கொஞ்சம் கூட விலகிச் செல்லவில்லை.

இந்த வாழைப்பழங்களில் மற்ற வகைகளைப் போலவே நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. இதனுடன் சேர்த்து, அவற்றில் சில அளவு இரும்பு, பாஸ்பரஸ், தியாமின் மற்றும் செலினியம் ஆகியவையும் அடங்கியுள்ளன. 

இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.


Leave a Reply

error: Content is protected !!