அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு , தயாராகும் விதமாக அரசியல் கட்சிகள் பணிகளை மும்முரமாக செய்ய தொடங்கிவிட்டனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி என அறிவித்து, 117 சட்டமன்ற தொகுதியில் ஆண் வேட்பாளர்களும், 117 சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
Also Read : 2021 தேர்தல் யுத்தத்திற்குப் படையைக் கட்டி, இலக்கை நோக்கிப் பாய்வோம் – சீமான் பேரழைப்பு..
இந்நிலையில் தமிழகத்தில் முதல் அரசியல் கட்சியாக பல தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை அறிவித்து கிராமங்கள் தோறும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர்.
