
திருப்பரங்குன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபத் திருநாளையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணி கள் பாதுகாப்பு மையம் 16 கால் மண்டபம் அருகே ஏற்பாடு செய்யப்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு 16 கால் மண்டபத்திலிருந்து கீழரதவீதி, கோயில் அலுவலகம் வழியாக கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடிந்த பின் பக்தர்கள் சஷ்டி மண்டபம் வழியாக வெளியே வந்து மேல ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக 16 கால் மண்டபம் வரலாம்.
மேலும் வாகனங்களுக்கு கிரி வலப் பாதை, திருப்பரங்குன்றம் பாலத்தில் அனுமதி இல்லை. திருமங்கலம், திருநகர் வழியாக பெரியார் நிலையம் செல்லும் வாகனங்கள் பேருந்து நிறுத்தம், புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.
அதே போல பெரியார் நிலையத்திலிருந்து திருமங்கலம், திருந கர் செல்லும் வாகனங்கள் புறவழிச் சாலை பூங்கா பேருந்து நிறுத்தம் வழியாக செல்லலாம்.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மாதா அமிர்தானந்தாமயி மடம் மற்றும் அவனியாபுரம் சந்திப்பு, திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் பாதையிலும், மேம்பாலத்திற்கு அருகிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.