இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தில் புதிய ஆவின் பொருள் விற்பனை நிலையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் R56 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிட வளாகத்தில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆவின் பொருட்கலான நெய் பால்கோவா போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கதலைவர்,வனராஜ் துணை தலைவர் N.M.கிருஷ்ணராஜ், நகர செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ், ஒன்றிய செயலாளர் குருசாமி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.