வெல்டிங் தொழிலாளி கடிதம் எழுதி வைத்து தற்கொலை.

குமரி வெல்டிங் தொழிலாளி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்குதாமரைகுளம் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (48). நாகர்கோவிலில் உள்ள ஒரு லேத் பட்டறையில் வெல்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நாகராஜனுக்கு கவிதா (45) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மகன்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். நாகராஜனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜனின் மனைவி கவிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவனுடன் சண்டை போட்டுவிட்டு நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டார் பகுதியிலுள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு மகன்களையும் அழைத்து சென்றுவிட்டார். வடக்குதாமரைகுளத்தில் உள்ள வீட்டில் நாகராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நாகராஜன் 5 பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டினுள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகராஜனை வெளியை காணாததால் அப்பகுதியில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டினுள் பார்த்துள்ளனர். அங்கு நாகராஜன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், தவசிலிங்கம், ஜாண்கென்னடி மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து நாகராஜனின் உடலை கைப்பற்றினர்.

அங்கு விசாரணை மேற்கொண்டனர் அப்போது நாகராஜன் எழுதி வைத்திருந்த 5 பக்க கடிதம் போலீஸ் கையில் சிக்கியது. அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் மனைவி, தன்னுடைய மாமியார், மற்றும் மனைவி வீட்டு உறவினர்கள் காரணம் என்று எழுதி இருப்பதாக போலீசார் கூறினர். தற்கொலை செய்துகொண்ட நாகராஜனின் உடலை ஒரு போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!