
பிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி (Anouk Aimee) காலமானார். அவருக்கு வயது 92.தனது 14 வயதில் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அனோக், சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
1947 முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரெஞ்சு ரொமன்டிக் படமான, ‘ஏ மேன் அண்ட் எ வுமன்’ (1966)மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். லோலா, ஆண்ட்ரே மேன், ஜஸ்டின், இத்தாலிய படமான ஏ லீப் இன் த டார்க் என பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். கோல்டன் குளோப் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், பாரிஸில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் காலமாகிவிட்டதாக அவர் மகள் மானுயெல்லா தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்குத் திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.