
தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட கட்சிகள் என்னென்ன? தமிழ்நாடு லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் உள்ள பாதி கட்சி லிஸ்ட் இங்கதான் இருக்கு..!
இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3,000 சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளன. விதிமுறைகளை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9ம் தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் 2வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டிருந்த 42 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுதும் தேர்தல்களில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 42 அரசியல் கட்சிகளும் அடங்கும்.
ரத்து செய்யப்பட்ட 42 தமிழக கட்சிகள்
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன்)
- மனிதநேய மக்கள் கட்சி (ஜவாஹிருல்லா)
- மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி)
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்)
- எழுச்சி தேசம் கட்சி
- கோகுல மக்கள் கட்சி
- பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபாலன்)
- தமிழர் தேசிய முன்னணி
- தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி
- விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்
- திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ்
- தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி
- தமிழர் முன்னேற்றக் கழகம்
- தொழிலாளர் கட்சி
- உரிமை மீட்பு கழகம்
- வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி
- விஜய பாரத மக்கள் கட்சி
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி
- அகில இந்திய பார்வர்டு பிளாக்
- அகில இந்திய மக்கள் நகர்வு கட்சி
- அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
- அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்
- அகில இந்திய சத்யஜோதி கட்சி
- அனைத்து இந்திய தமிழக முன்னேற்ற கழகம்
- அண்ணா மக்கள் இயக்கம்
- அனைத்து இந்திய தொழிலாளர் கட்சி
- அண்ணன் தமிழக எழுச்சி கழகம்
- டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்
- எழுச்சி தேசம் கட்சி
- இந்திய காதலர்கள் கட்சி
- இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
- மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி
- மக்கள் தேசிய கட்சி
- மக்கள் கூட்டமைப்பு கட்சி
- மக்களாட்சி முன்னேற்ற கழகம்
- பச்சை தமிழகம் கட்சி
- சமத்துவ மக்கள் கழகம்
- சிறுபான்மை மக்கள் நல கட்சி
- சூப்பர் தேசிய கட்சி
- சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்
- தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்
- தமிழர் தேசிய முன்னணி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.