
புரட்டாசி பொங்கல் திருவிழாவிற்காக செவ்வாய் சாட்டுதல் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் அருள்பாலிக்கும் கிராம தேவதை அருள்மிகு ஶ்ரீ சுந்தரவள்ளி அம்மன் திருக்கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவிற்காக செவ்வாய் சாட்டுதல் விழா நடைபெற்றது.
07.10.2025 நேற்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டி செவ்வாய் சாட்டும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று தீப, தூப ஆராதனைகள் செய்யப்பட்டு, 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி நிரல்
10.10.2025 அன்று மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை
14.10.2025 செவ்வாய் கிழமை அன்று காலை 6 மணிக்கு பால்குடம் எடுத்தல்
அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் கோவில் அருகே அன்னதானம்
மாலை 4 மணிக்கு பொங்கல் இடுதல்
இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை
15.10.2025 அன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.