மதுரை ரயில்வே சந்திப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இன்று பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு ரூ300 என இயந்திரத்தில் பதிவிட்டு 225 ரூபாய்க்கு வந்தவுடன் பெட்ரோல் நிரப்புவதை நிறுத்தியதால் 75 ரூபாயை மோசடி செய்கிறீர்களா..? என பெட்ரோல் ஆப்ரேட்டரிடம், பெட்ரோல் அளவை குறைத்து மோசடியில் ஈடுபடுவதாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டதை நேரலையாக சமூக வலைதளங்களில்
வீடியோ
வீடியோ வைரல் ஆன நிலையில்,தொடர்ந்து புகார் வந்ததை கண்டு இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மதுரை மாவட்ட விற்பனை பிரிவின் துணை மேலாளர் அந்த பெட்ரோல் பங்கிற்கு 15 நாட்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும் தெரிவித்தனர்.