வரும் தேர்தலில் போட்டி…. பா.ஜ.க வில் இணைவது குறித்து மு.க.அழகிரி பதில்..

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப் போக தெரியவரும் எனவும் பாஜகவில் இணைவது வதந்தி எனவும் கூறிய அவர் வரும் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஆலோசித்து, பின்புதான் அதற்ககான முடிவு எடுப்போம் என்றார். வரும் தேர்தலில் திமுகவிற்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!