விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் அதிகாலை முதல் நடைபெற்றது. பின் குருநாத சுவாமி -க்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் சோமவார பூஜை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜைகளும், 1008 கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.