விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்தவர் குருநாதன் வயது 54 இவரது மகள் மனிஷா ஸ்ரீ வயது 23 மனிஷா ஸ்ரீ குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் கவுன்சிலிங் நடந்துள்ளது இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள தனது தந்தை குருநாதன் மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகியோருடன் சென்னை சென்று விட்டு நேற்று மாலை சென்னை To செங்கோட்டை சிறப்பு ரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு ரயில் இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பைய நாயக்கர் பட்டி அருகே வரும் போது தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷா ஸ்ரீ காற்று வாங்குவதற்காக படிக்கட்டு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது.அப்போது எதிர்பாராத விதமாக
ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார்.மணிஷா ஸ்ரீ விழுந்தது தெரியாமல் தந்தை குருநாதன் மற்றும் மாமா அய்யனார் ஆகியோர் ரயிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இரயிலானது சங்கரன்கோவில் வந்தவுடன் மனிஷா ஸ்ரீ தேடியுள்ளனர்.இருக்கையில் மனிஷா ஸ்ரீ இல்லாததால் அதிர்ச்சி அடைந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை செய்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தண்டவாள பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர்.அப்போது கோப்பையை நாயக்கர்பட்டி அருகே உள்ள தண்டவாள பகுதியில் மனிஷா ஸ்ரீ பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மனிஷாஸ்ரீக்கு கவுன்சிலிங்கில் ஊரக மருந்தவ துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பணி கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த நிலையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது அவரின் உறவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.