
உடல்நலக்குறைவால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழந்துள்ளார். “அசத்தப்போவது யாரு”, “கலக்கப்போவது யாரு”, “அது இது எது” , மற்றும் சரவணா ஸ்டோர் விளம்பரத்திலும், ஆதித்யா டிவி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் வாயிலாக மக்களுக்கு மிகவும் ரசனைக்குரிய நகைச்சுவைையை அளித்து வந்தவர் வடிவேல் பாலாஜி.
இவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமாகியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போல தோற்றமும் காமெடியும் செய்து வருவதால் இவர் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். வடிவேல் பாலாஜி மறைவு அவரது ரசிகர்களை மிகவும் கவலையளித்துள்ளது.