அமைச்சர் வீட்டு வாசலில்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிப் படுகொலை-மதுரையில் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிப் படுகொலை!

மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் பாலசுப்பிரமணி (34) இவர் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

இன்று காலை 7 மணி அளவில் செல்லூர் பகுதியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தபோது பழனிவேல் தியாக ராஜன் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் வீட்டு வாசலில்

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக அாிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த பாலசுப்ரமணியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!