
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறைக் காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது.
தலைநகரான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று மாலையிலும் கடும் அனலும், புழுக்கமும் நிலவியது. இந்நிலையில் இரவு 8 மணிக்கு மேல் பலத்த புழுதிக் காற்று வீசியது. பின்னர் லேசான தூறலாக தொடங்கிய மழை தொடர்ந்து கனமழையாக பெய்தது.
கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம் உட்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணா சாலை உட்பட பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.