தமிழில் வருகிறது டெட்பூல் & வோல்வரின்

மார்வெல் நிறுவன சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன்மேன், தோர், ஹல்க் என்ற அந்தப் பட்டியலில் வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்துக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை இணைத்து உருவாகியுள்ள படம், ‘டெட்பூல் & வோல்வரின்’.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34-வது படமான இது, டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷான் லெவி (Shawn Levy) இயக்கியுள்ள இதில், ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும் ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் ஜூலை 26-ம் தேதி தமிழிலும் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!