மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் GST சாலையில் பைக்கரா அருகே தனியார் மருத்துவமனை எதிரே கடந்த மாதம்12 தேதி மாலை திடீரென சுமார் 3 அடி அகலமும் 20 அடி ஆழமுள்ள பள்ளம் விழுந்தது. இதனை மாநகராட்சி அதிகாரிகளும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் சரி செய்தனர். இந்த நிலையில் வாகன போக்குவரத்து அதிகம் நிலவும் பகுதியான இப்பகுதியில் நேற்று அதன் அருகே சுமார் பத்தடி தள்ளி மீண்டும் ஒரு மிகப்பெரிய பள்ளம் விழுந்தது இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் தலைமையில் காவலர்கள் போக்குவரத்து மாற்றம் செய்து அப்பகுதிக்கு வாகனம் சொல்லாத அளவிற்கு தடுப்பு அரண்(பேரிகார்டு) அமைத்து, பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பின் சிமெண்ட் காங்கிரட் பள்ளம் மூடப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகம் செல்லும் பகுதியில் அடிக்கடி இதுபோன்று பலம் பெறுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை உள்ளது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சாடுகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும்,மீண்டும் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் தவிர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.