பரபரப்பு.. இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்.. உயிருடன் வந்து குடும்பத்துடன் தலைமறைவு.. போலீஸ் விசாரணை..!

பரபரப்பு.. இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்.. உயிருடன் வந்து குடும்பத்துடன் தலைமறைவு.. போலீஸ் விசாரணை..!

தேனி மாவட்டத்தில் உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் 7 வயதில் மகனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிவண்ணன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் முருகேஸ்வரி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மணிகண்டன் தனது தந்தை தங்கமலை, தாய் செல்வம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கூலி வேலைக்கு செல்வதாக கூறி மணிகண்டன் வெளியூருக்கு சென்று விட்டார். தங்க மலையும் வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டார்.

செல்வம்மாள் வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டிற்கு சென்றார். கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி தங்கம்மாள்புரம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது ஒரு சடலம் கிடந்தது. அப்போது செல்வமாலும் முருகேஸ்வரியும் இறந்து கிடந்தது மணிகண்டன் தான் என்பதை உறுதி செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இறந்ததாக கூறப்பட்ட மணிகண்டன் தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு வந்துள்ளார். அவரை பார்த்த கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர். தனது தாய் தந்தையை பார்க்க இப்போதுதான் வெளியூரில் இருந்து வருவதாக மணிகண்டன் கூறியுள்ளார். இதனால் இறந்து போனதாக கூறப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயிருடன் வந்த மணிகண்டன் மீண்டும் குடும்பத்துடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!