அரசு இ – சேவை மையங்களில், வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை இணையதள சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன. இதேபோல் மேலும், 15 சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகள் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் ஆகிய 15 வகையான சான்றிதழ்கள், மின்னாளுமை திட்டத்தில், இ – சேவை மையங்கள் வழியாக வழங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் பரிவர்த்த்தனை செய்யப்படும் மற்றும் பதியப்படும் எந்த சான்றிதழ் விண்ணப்பத்திற்க்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதில்லை. மேலும் பிரிண்டர் வேலை செய்யப்படவில்லை என கூறி இ சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் இ சேவை மையத்தினர் தனியார் நெட் சென்டர் உரிமையாளர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு கமிஷன் பார்ப்பதற்க்காக பொதுமக்களை இ சேவை மையத்திற்க்கு பிரிண்டர் சரியில்லை என திருப்பி அனுப்புவதாக கூறுகின்றனர்.