290கி.மீ தூரம் ரயிலின் அடியில் சக்கரத்தை பிடித்துக் கொண்டு பயணித்த வாலிபர்.. வீடியோ வைரல்.!!

290கி.மீ தூரம் ரயிலின் அடியில் சக்கரத்தை பிடித்துக் கொண்டு பயணித்த வாலிபர்.. வீடியோ வைரல்.!!

ரயில் பெட்டியின் அடியில் சக்கரத்தை பிடித்துக் கொண்டு ஒருவர் 290 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இளம் வயது நபர், மத்திய பிரதேசத்தில் இருக்கும் இதர்சி எனும் இடத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 250 கி.மீ ரைல் பெட்டியின் சக்கரத்திலேயே பயணித்திருக்கிறார். அதுவும், அது ஒரு எக்ஸ்பிரஸ் ரயில். இவரை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

டிசம்பர் 24ஆம் தேதி, அதிக தூரம் கடக்கும் தனபூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதற்குறிய கடைசி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள், ஒரு இளைஞர் S4 கோச்சிற்கு கீழே படுத்திருப்பதை பார்த்துள்ளனர். இவரது பாதுகாப்பு கருதி முதலில் லோகாே பைலட்டிற்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தியிருக்கின்றனர். இதையடுத்து ரயிலும் நின்றிருக்கிறது.

அந்த கோச்சிற்கு வந்த அதிகாரிகள், ஒருவர் கீழே படுத்திருப்பதை பார்த்திருக்கின்றனர். இவரை பிடித்து விசாரித்ததில் இத்தனை கிலோ மீட்டரும் அவர் இப்படியே பயணித்தது தெரிய வந்திருக்கிறது.

அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்ததில், அவர் டிக்கெட் வாங்குவதற்கு பணம் இல்லாததால் இவ்வாறு பயணித்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது இந்த வழக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கைக்கு சென்றுள்ளது. அவர்கள் இந்த நபர் குறித்து முழு விவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!