கடல் உள்ளான் எனும் வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக திகழும் நிலையூர் கண்மாய்!

கடல் உள்ளான் எனும் வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக திகழும் நிலையூர் கண்மாய்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் கூத்தியார்குண்டு பகுதியில் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வெளிநாட்டு பறவையான கடல் உள்ளான் என்னும் பறவை தங்களது இனப்பெருக்கத்திற்காக கண்மாயில் நடுவே தண்ணீர் வற்றியதால் யாரும் வரமுடியாத சூழலில் கண்மாயின் மையப்பகுதியில் தரையில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுபொறித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களின் ஒன்றாக கருதப்படும் கண்மாய்களில் நிலையூர் கண்மாயும் ஒன்று. இந்த கண்மாய் 742 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியமடை, சின்ன மடை, உள்மடை என்று 3 மடைகளும், பெரிய கலுங்கு, சின்னகலுங்கு என்று 2 கலுங்கும் கொண்டதாகும். இந்த கண்மாய் மூலம் 1712 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கொண்ட கண்மாயாக உள்ளது. 25 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த கண்மாயில் ஏராளாமான மீன்கள் நிறைந்து காணப்படும். தற்போது கண்மாயில் உள்ள மீன்களை இரையாக உட்கொள்வதற்காக பலவிதமான பறவைகள் வருகின்றன.

https://youtu.be/0qs_o1Ac-UY

இதனைத் தொடர்ந்து., இரை தேடி அவ்வப்போது வெளி நாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. வெளிநாட்டு பறவைகளில் ஒன்றாக கருதப்படும் கடல் உள்ளான் என்னும் பறவை இங்குள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கண்மாயில் மையப்பகுதியில் பொதுமக்கள், மாடு மேய்ப்பவர்கள் என யாரும் நெருங்காதவன்னம் தரையில் குச்சிகளால் வட்ட வடிவில் கூடுகட்டி அதில் முட்டையிட்டு ஆண் பெண் இணை இரண்டு பறவைகளும் அடைகாத்து குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.

பொதுவாக நதிக்கரை சதுப்பு நிலங்கள் என நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே இப்பறவை வாழும். இதனால் தான் கண்மாய்க்குள் தரை பகுதியில் அங்கும் இங்குமாக பல இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் குவியல் குவியலாக கிடைப்பதை கண்டு மாடு மேய்ப்பவர்கள் கூறியதை அடுத்து பிரத்யோகமாக கண்மாயின் நடுப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் தண்ணீரில் நடந்து சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Similar Posts

Leave a Reply