
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா. இவர் ‘குண்டூர் காரம்’ படத்தில் மகேஷ்பாபுவுடன் ஆடிய பாடல் காட்சி மொழி கடந்தும் பிரபலமானது. தமிழிலும் நடிக்க இருக்கும் அவர், இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். இந்தி நடிகர் வருண் தவண் அடுத்து முக்கோண காதல் கதையை கொண்ட காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் மிருணாள் தாக்குர். இன்னொரு நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இதையடுத்து சைஃப் அலிகான் மகன் இப்ராஹிம் அலிகான் அறிமுகமாக இருக்கும் படத்திலும் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.