யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு!எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்


இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடந்த கொடூர இனப்படுகொலையில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்த கொடூரமான செயல்கள் அரங்கேறின. அதுமட்டுமின்றி பாலியல் வன்மங்கள்; ஆட்கடத்தல்கள்; சித்திரவதைகள் என்ற மிகமோசமான அநியாயங்கள், அக்கிரமங்கள் இலங்கை இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்டன. முள்ளி வாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இரவோடு இரவாக புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் துணையுடனேயே இந்த இடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய இனவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அதே இடத்தில் இலங்கை அரசு நிறுவ வேண்டும். இந்திய அரசும் தூதரக ரீதியாக அதற்கான அழுத்தம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணையவும்.

Leave a Reply

error: Content is protected !!