மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலிருந்து விலகிய கட்சி…

நல்லவர்கள் கூடாரம், குழப்பவாதிகள் கூடாரமாகிறது  என்று தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத்குமாரின் அகில இந்திய கூட்டணி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே  மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகி உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க இருந்தது. இந்த கட்சிக்கு முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யம் 4 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்படாததால் மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலிருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!