அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் உருவ படத்துடன் அதிமுக நிர்வாகிகள் நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஏ.டி.துரைமுருகேசன்,
மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர்கள் நவரத்தினம்,குருசாமி, மற்றும் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.அதன் பின் ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அவருடைய திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.