வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரம் கிலோ பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.

ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோவில் அடைக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு அனுமதிக்காமல் இருந்து நிலையில் தற்போது கோயில்கள் திறந்து சமூக இடைவேளியுடன் சாமி தரிசனம் செய்ய அரசு உத்தரவை அடுத்து ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடும் விதமாக

சிங்கராஜா கோட்டை பகுதியைச் சேர்ந்த கோவில் நிர்வாகம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஆயிரம் கிலோ பூ மற்றும் துளசியை கொண்டு தோரணங்கள் மற்றும் அலங்கார பணிக்காக பூ கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

error: Content is protected !!