மதுரை மாவட்டம் துவரிமான் கீழத்தெரு பகுதியில் வசிப்பவர் சுந்தரி வயது 58 இவரது கணவர் ராமலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில் இவருக்கு இன்ப வள்ளி என்ற ஒரு மகள் உள்ளார் அவரும் திருமணம் ஆகி அருகில் பரவை கிராமத்தில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் துவரிமானில் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு பெய்த புயல் மழைக்கு சுந்தரி என்பவர் வீட்டின் மீது அருகில் இருந்த வாவரக்காச்சி மரம் வேரோடு முறிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்த நிலையில் சடசட என சத்தம் வந்தவுடன் வீட்டிற்குள் இருந்த சுந்தரி பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த மரம் வேரோடு முறிந்து வீட்டின் மேல் விழுந்து உள்ளது இதில் சமையலறை பகுதிசேதமடைந்து உள்ளது சமையலறைக்கு அருகில் உள்ள அறையில் படுத்திருந்த சுந்தரி வீட்டை விட்டு வெளியேறி வந்ததால் உயிர்த்தப்பினார்.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் மின் துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக அங்கு வந்த மின்சார துறையினர் வீட்டில் இருந்த மின்சாரத்தை நிறுத்தினர் காலையில் வந்து பார்த்த கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மரத்தை அப்புறப்படுத்தி சேதம் அடைந்த வீட்டிற்கு உரிய இழப்பீடு பெற்று தரவும் சேதம் அடைந்த பகுதியை சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றுள்ளார்..
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.