கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவுடையார்கோவில் மார்கழி திருவாதிரை பெருவிழா -2025
ஆவுடையார்கோவில் என வழங்கப்பெறும் திருப்பெருந்துறை அருள்தரு ஸ்ரீ யோகாம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதசுவாமி மற்றும் அருள்திரு ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் திருக்கோயில் மார்கழி திருவாதிரை பெருவிழா -2025 உட்பிரகார சேவை.
முதல்நாள் திருவிழா நாளான இன்று (3/1/2025) மார்கழி 19
வெள்ளிக்கிழமை காலை
காலை 5 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உற்சவர் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி கீழிறங்கி வந்து ஆத்மநாதசுவாமி முன்பாக காப்புக் கட்டிக் கொள்ளுதல் மற்றும் ஏழு நிலைகள் கொண்டு 200அடி உயரத்தில் அமைந்துள்ள ராஜகோபுரத்தில் (மஹத்துவஜாரோஹணம்) கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.