மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்கார விழா.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் நடந்தது இவ்விழாவை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி கணபதி ஹோமம் நடந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர் தினசரி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது நேற்று மாலை நாலு மணி அளவில் அம்மனிடம் நாகேஸ்வரன் பட்டர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது முருகன் அலங்காரமாகி கேடயத்தில் கோவில் வளாகத்தில் சூரசம்ஹார விழா நடந்தது இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர் அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியுடன் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் சூரசம்காரம் நடந்தபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் வீரவேல் என்று பக்தி கோஷமிட்டனர் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது விழாவையொட்டி மதுரை ஆதித்யா நிறுவனர் செந்தில் குமார் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பார்சலாக வழங்கினார் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆலய பணியாளர்கள் வெங்கடேசன் கிருஷ்ணன் மணி உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி கண்ணன் அருள் பாண்டி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் இன்று சனிக்கிழமை காலை பாவாடை தரிசனம் நடைபெறும் மாலை 4 மணி அளவில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வருவார்கள் 5 மணிக்கு மேல் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற இருக்கிறது இதையொட்டி கல்யாண விருந்து அன்னதான பார்சல் வழங்கப்படும் விழா ஏற்பாடுகளை பிரதோஷ விழாக்குழுவினர் செய்திருந்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Leave a Reply

error: Content is protected !!