மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வெடிகுண்டு தாக்குதலில் காயம்

வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், மஜிலிஸ் (Majilis) சபாநாயகர் மற்றும் முன்னாள் அதிபர் மொஹமத் நஷீத் காயமடைந்தார். வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், மஜிலிஸ் (Majilis) சபாநாயகர் மற்றும் முன்னாள் அதிபர் மொஹமத் நஷீத் காயமடைந்தார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது, அவர் தனது காரில் ஏறிக்கொண்டிருந்தார். படுகாயமடைந்த மொஹமத் நஷீத் ADK மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

79.4% திறனுடன் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா அங்கீகாரம் “இது ஒருவித மேம்பட்ட வெடிமருந்து சாதனம் போல் தெரிகிறது, இது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கலாம்” என்று அவரது மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (Maldivian Democratic Party) அதிகாரி ஒருவர் கூறினார். நஷீத்துக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் ஏதும் இன்னும் வெளிவரவில்லை. அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு சப்தம் தலைநகர் முழுவதும் கேட்டதாக மாலேயில் (Male) வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 2019 இல் நடந்த தேர்தலில் நஷீதின் கட்சியின் மகத்தான வெற்றியை அடைந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் நாட்டின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த பதவியான நாடாளுமன்ற சபாநாயகர் என்ற பதவிக்கு அதிபதியானார் நஷீத். 2008 ஆம் ஆண்டில் முதல் பல கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர் நாட்டின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்ற பெருமை பெற்றார் நஷீத். 2012 ல் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றதால், 2018 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. இருப்பினும், 2018 அதிபர் தேர்தலில் நஷீதின் கட்சி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பின்னர் நஷீத் நாடு திரும்பினார்.

முன்னதாக, அவர் தாமாகவே நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசித்துவந்தார். தற்போது நசீதி மீது நடைபெற்றிருக்கும் தாக்குதலை வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் கடுமையாக கண்டித்தார். “இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. அதிபர் நஷீத் மற்றும் இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே இப்போது நமது பிரார்த்தனையாக உள்ளது” என ட்விட்டரில் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!