மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பாரம்பரியமான முறையில் கிறிஸ்துமஸ் பொம்மைகள், விநாயகர் சிலைகள், மற்றும் கொலு பொம்மைகள் தயார் செய்கின்றனர்,
இவர்கள் கடந்த மார்ச் 25 தேதி முதல் கொரான காலத்திலிருந்து வியாபாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் கிறிஸ்துமஸ் பொம்மைகள் விற்பனை நன்றாக இருக்கும் .
ஆனால் கடந்த மார்ச் 25ஆம் தேதி கொரானா காலத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி கொலு ,கார்த்திகை தீபம் உள்ளிட்டவைகளில் விற்பனையாகாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
தற்பொழுது கிறிஸ்மஸ் பொம்மைகள் தயார் செய்து விற்பனை, செய்யப்படும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர் சிறிய வியாபாரிகள் முதல் பெரியவர்கள் வரை இவர்களுக்கு குறைந்தபட்சம் 4 லட்சத்து முதல் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் என கிறிஸ்மஸ் பொம்மைகள் விற்பனை செய்ய முடியாமல் இப்பகுதியில் தேங்கி உள்ளது.இதனால் மிகவும் வேதனையில் உள்ளனர்.