13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது..

காவல் ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் உட்பட மொத்தம் 11 நபர்கள் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது..

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமி உடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது வியாசர்பாடி சிறுமி சிக்னலில் பேனா, பென்சில் வாய்ப்பாடு, போன்ற பொருட்களை விற்று உடல் நலம் குன்றிய தனது தாயை காப்பாற்றி வருகின்றார். சிறுமியின் தாயின் அக்கா மகளான ஷாகிதா என்பவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் வேடியை சேர்ந்த மதன்குமார். என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஷாகிதா தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அதனால் தனக்கு உதவியாக தங்கையை அனுப்பி வைக்குமாறும் சிறுமியின் தாயாரிடம் கேட்டுள்ளார். தனது பெரியம்மாவின் மகளான ஷாகிதாவின் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார்.

2 மாதங்களாகியும் சகோதரி வீட்டுக்கு சென்ற மகள் திரும்பி வராததால், மதன் குமாரிடம் தனது மகளை திருப்பி அனுப்புமாறு சிறுமியின் தாய் கேட்டுள்ளார். ஆனால் மதன்குமாரும் அவரது மனைவியுமான மறுக்க, சிறுமியின் தாய் நேரில் சென்று சண்டையிட்டு சிறுமியை அழைத்து வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த சிறுமியின் செயலில் மாற்றம் தெரியவே சிறுமியின் தாயார் விசாரித்துள்ளார்.

இதையடுத்து கணவர் மதன் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இந்த வழக்கில் கடந்த 12-ஆம் தேதி சிறுமியின் அக்காவான ஷாகிதா, மதன்குமார், மதன் குமாரின் தங்கை சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி போலீசார் ஒருவர் மதுபோதையில் தன்னை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாக போலீசாரிடம் கூறியதையடுத்து போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கினர்.

போக்சோ கைது

ஷாகிதா , மதன்குமார் மற்றும் மதன் குமாரின் தங்கை சந்தியா ஆகிய மூவரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து போலீசார் மீண்டும் விசாரணை செய்தபோது பாலியல் தொழிலில் சந்தியாவின் ரெகுலர் கஸ்டமரான காசிமேடு பகுதியைச் சேர்ந்தபாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவரிடம் அதிக பணத்திற்கு சிறுமியை அனுப்பி வைத்தது தெரியவந்தது.

மேலும், பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரனும் எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான புகழேந்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி ராஜேந்திரனிடம் சிறிய வயது பெண்ணாக ஒரு பெண் வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் ராஜேந்திரன் சந்தியாவிடம் கூறி அதிக விலைகொடுத்து சிறுமியை அழைத்து சென்றதும், பின் ராஜேந்திரனும் காவல் ஆய்வாளர் புகழேந்தியும் சிறுமியை மது போதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதேபோல ராஜேந்திரனின் மற்றொரு நண்பரான சென்ட்ரல் ரயில் நிலைய ஊழியரான காமேஸ்வரன் என்பவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் புகழேந்தி, அவரது நண்பர் ராஜேந்திரன், சென்ட்ரல் ரயில் நிலைய ஊழியர் காமேஸ்வரன் ஆகிய மூன்று நபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் உட்பட மொத்தம் 11 நபர்கள் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் இன்னும் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் எனவும் உடனடியாக அவர்களை கைது செய்யவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

https://wa.me/message/5ZNFDVUGHX5OK1

Leave a Reply

error: Content is protected !!